தேசிய துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் திலோத்தமா!

தேசிய துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் திலோத்தமா!

Bismi

தேசிய துப்பாக்கி சுடுதலில் திலோத்தமா இரண்டாவது தங்கம் வென்றார்.

போபாலில், தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 68வது சீசன் நடக்கிறது. பெண்களுக்கான தனிநபர் 10 மீ. ‘ஏர் ரைபிள்’ பிரிவு பைனலில், ஹரியானாவின் அமீரா அர்ஷத், 251.9 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கத்தை தட்டிச் சென்றார். ரயில்வே வீராங்கனை ராஜ்ஸ்ரீ அனில்குமார் சஞ்சேதி (251.8 புள்ளி), 0.1 புள்ளி வித்தியாசத்தில் வெள்ளி வென்றார். சட்டீஸ்கரின் பிரஞ்சு ஸ்ரீ சோமனி (230.5) வெண்கலம் கைப்பற்றினார். இதன் அணிகள் பிரிவில் ஹரியானா அணி (1892.7 புள்ளி) தங்கம் வென்றது. ரயில்வே (1886.0), மத்திய பிரதேச (1884.3) அணிகள் முறையே வெள்ளி, வெண்கலம் கைப்பற்றின.ஜூனியர் பெண்களுக்கான 10 மீ.’ஏர் ரைபிள்’ பிரிவில் கர்நாடகாவின் திலோத்தமா சென் (253.1 புள்ளி) தங்கம் வென்றார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்