தேவர் ஜெயந்தி விழா திருச்சியில் வரும் 28ஆம் தேதி தேவர் பேரவை சார்பில் கொண்டாடப்படுகிறது.
தேவர் ஜெயந்தி விழா திருச்சியில் வரும் 28ஆம் தேதி தேவர் பேரவை சார்பில் கொண்டாடப்படுகிறது.
திருச்சியில் வரும் 28ஆம் தேதி அனைத்திந்திய தேவர் பேரவை சார்பில் தேவர் ஜெயந்தி விழா
திருச்சி தில்லைநகர் 7வது குறுக்கு தெருவில் உள்ள கார்த்திக் வைத்திய சாலையில் காலை 10 மணி அளவில் அனைத்திந்திய தேவர் பேரவை தலைவர், கலியுக சித்தர் சுப்பையா பாண்டியன் தலைமையில் கொண்டாடப்படுகிறது,
இந்நிகழ்வில் ஏழை எளிய பெண்களுக்கு இலவச புடவைகள் வழங்கப்படுகிறது, அத்துடன் பொது மக்களுக்கு உணவு, வலி மருந்துகள், சத்து மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

அனைத்திந்திய தேவர் பேரவை தலைவர், கலியுக சித்தர் சுப்பையா பாண்டியன் தலைமையில், டாக்டர்கள் தமிழரசி சுப்பையா பாண்டியன், கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
நிகழ்ச்சியில் அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
இந்த விழாவில் அதிமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள், தேவர் பேரவை உறுப்பினர்கள், நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ளுமாறு கலியுக சித்தர் சுப்பையா பாண்டியன் அழைப்பு விடுத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து திருச்சியில் அக்டோபர் 30ம் தேதி தேவர் ஜெயந்தி விழா திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கொண்டாடப்படுகிறது.


Comments are closed.