மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காத பாஜக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் இரு பகுதியாக திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், திருச்சி மேலப்புலிவார் சாலையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு திமுக திருச்சி கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன் தலைமை வகித்தார். இதில் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் உள்பட இளைஞர் அணி, மாணவரணி, தொண்டரணி, மகளிர் அணி, வழக்கறிஞர் அணி உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய பாஜக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.