பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்த பாஜக அரசை கண்டித்து திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்!

0

மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காத பாஜக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் இரு பகுதியாக திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், திருச்சி மேலப்புலிவார் சாலையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Bismi

ஆர்ப்பாட்டத்திற்கு திமுக திருச்சி கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன் தலைமை வகித்தார். இதில் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் உள்பட இளைஞர் அணி, மாணவரணி, தொண்டரணி, மகளிர் அணி, வழக்கறிஞர் அணி உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய பாஜக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்