இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையில் ராகுல் காந்தி வாகனம் மீது தாக்குதல் நடத்திய அசாம் பாஜக அரசை கண்டித்து திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

0

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ராகுல் காந்தி இரண்டாம் கட்ட இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை தொடங்கியுள்ளார். நேற்று அசாமின் லக்கிம்பூர் மாவட்டத்தில் ராகுல் காந்தியின் யாத்திரை பயணம் நுழைந்தது. அப்போது சிலர் யாத்திரையில் அணிவகுத்த வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அது மட்டுமல்லாது ராகுல் காந்தி உருவம் அச்சிடப்பட்டிருந்த பேனர்களையும் கிழித்தெறிந்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Bismi

அந்த வகையில் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் அசாம் பாஜக அரசை கண்டித்தும், அதற்கு துணை போன ஒன்றிய பாஜக அரசையும் கண்டித்து திருச்சி ரயில்வே ஜங்சன் அருகில் உள்ள ராஜீவ் காந்தி சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடைபெற்றது. மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை தலைவர் சுபசோமு கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கோட்ட தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள், வார்டு தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு பாஜக அரசிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்