தேசிய காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு! மாநகர காவல் ஆணையாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், 54 குண்டுகள் முழங்க, மலர் வளையம் வைத்து மரியாதை!
தேசிய காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு! மாநகர காவல் ஆணையாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், 54 குண்டுகள் முழங்க, மலர் வளையம் வைத்து மரியாதை!


1959 – ஆம் ஆண்டு, இதே நாளில் (அக்டோபர். 21) யூனியன் பிரதேசமான, “லடாக்” (LADAKH) பகுதியில், “ஹாட் ஸ்பிரிங்க்” (HOT SPRING) என்ற இடத்தில், சீன ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில், மத்திய பாதுகாப்புப் படை “காவலர்கள்” 10 பேர், நாட்டுக்காக தங்களுடைய இன்னுயிரை இழந்தனர். அவர்களின் தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் நினைவு கூரும் வகையிலும், இந்த சம்பவத்தை போலவே, நாடு முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின் போது, “வீரமரணம்” அடைந்த காவலர்களுக்கு,”புகழ் அஞ்சலி” செலுத்தும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ஆம் தேதி “தேசிய காவலர் வீரவணக்க நாள்” அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், (அக்டோபர். 21) திருநெல்வேலியில், பாளையங் கோட்டையில் உள்ள, மாநகர காவல் ஆயுதப்படை வளாகத்தில், உள்ள காவலர்கள் நினைவிடத்தில், “தேசிய காவலர் வீர வணக்க நாள்” அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி, காவல் துணை ஆணையர் டாக்டர். V.பிரசண்ண குமார், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், காவல் துணை ஆணையர்கள் கிழக்கு V.வினோத் சாந்தா ராம், தலைமையிடம் S.விஜயகுமார் மற்றும் திருநெல்வேலி மாநகர மாவட்ட காவல் அதிகாரிகள், காவலர்கள், ஊர்க்காவல் படையினர் என, பல்வேறு தரப்பினரும், “மலர் வளையம்” வைத்து, 54 குண்டுகள் முழங்க, இன்னுயிர் நீத்த காவலர்களுக்கு, “மரியாதை” செலுத்தினர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.


Comments are closed.