“தொண்டர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு, திமுகவிற்கு வலு சேர்க்க வேண்டும்!” திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக புதிய பொறுப்பாளர் கிரகாம்பெல் வேண்டுகோள்!
“தொண்டர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு, திமுகவிற்கு வலு சேர்க்க வேண்டும்!” திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக புதிய பொறுப்பாளர் கிரகாம்பெல் வேண்டுகோள்!

திருநெல்வேலி கிழக்கு மாவட்டம்,

பாளையங்கோட்டை வடக்கு ஒன்றியம், திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம், பாளையங் கோட்டையை அடுத்துள்ள, “பர்கிட்மா நகர்” பொன் மஹால் திருமண மண்டபத்தில் வைத்து, ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர். 19)காலையில் நடைபெற்றது. பாளையங்கோட்டை வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் “வேலங்குளம்” கண்ணன் தலைமை வகித்தார். திருநெல்வேலி கிழக்கு மாவட்ட, திமுக இளைஞர் அணி துணை அம்ப்பாளர் மனோஜ்குமார், அனைவரையும் வரவேற்று பேசினார்.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக புதிய பொறுப்பாளர் “முனைவர்” ம.கிரகாம்பெல், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசும் போது, “கட்சியின் வளர்ச்சி பணிகளில், ஒவ்வொருவரும் தனக்கவனம் செலுத்த வேண்டும். அதுமட்டுமல்லாது, தொண்டர்கள்மிகுந்த ஒற்றுமையுடன் செயல்பட்டு, திமுகவிற்கு வலு சேர்க்க வேண்டும்!” என்று, வலியுறுத்தினார்.
(SIR) வாக்காளர் பட்டியல், தீவிர திருத்தம் குறித்தும், அவர் விளக்கம் அளித்து, தொணடர்கள் கேட்ட சந்தேகங்களுக்கு, உரிய பதில்களையும், வழங்கினார். இந்த கூட்டத்தில் கட்சியின், மாவட்ட பொருளாளர் ஜார்ஜ் கோசல், வள்ளியூர் ஆதிபாண்டி, முத்துராஜ், அவைத் தலைவர் சம்பத் ராஜா, தொண்டர் அணி வேல் பாண்டி, திருப்பதி, ஜெய சீலன், அழகு முத்து, மணி கண்டன், மகா ராஜன், ஆதி பரமேசுவரன், கோபி, சரவணன், சிவா சுரேஷ், மற்றும் கிளை செயலாளர்கள் உறுப்பினர்கள் என பலரும், கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.


Comments are closed.