திருச்சியில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி வரும் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது!
திருச்சி பாபு ரோட்டில் அமைந்துள்ள ஜி.வி.என் மருத்துவமனை மருத்துவர்கள், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினர், அதில்…
புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில், அக்டோபர் மாதம் முழுவதும் “பிங்க் அக்டோபர்” என்ற பெயரில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பொதுமக்களிடையே மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக டாக்டர் சாந்தா மார்பக புற்றுநோய் அறக்கட்டளை, டாக்டர் ஜி.விஸ்வநாதன் மருத்துவமனை, திருச்சி மாவட்ட தடகள சங்கம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு வளர்ச்சி சங்கம் ஆகியோர் இணைந்து கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் அரை மாரத்தான் போட்டியை நடத்தி வருகின்றோம். அந்த வகையில் இந்த இந்த ஆண்டு வரும் 6 ஆம் தேதி 21.1 கிலோமீட்டர் மற்றும் 5 கிலோ மீட்டர் மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. இதில் 21.1 கிலோமீட்டர் மாரத்தான் போட்டியானது காலை 5:30 மணி அளவில் மாம்பழச்சாலை ஹோலி கிராஸ் கான்வென்டில் இருந்து துவங்கி ஸ்ரீரங்கம், அம்மா மண்டபம், காவிரி பாலம், அண்ணா சிலை, கலைஞர் அறிவாலயம், கோர்ட் ரவுண்டானா, தலைமை தபால் நிலையம், டிவிஎஸ் டோல்கேட், எஸ்.ஆர்.எம் ஹோட்டல் வழியாக ஜமால் முகமது கல்லூரியில் நிறைவடைகிறது. 5 கிலோமீட்டர் போட்டியானது காலை 7 மணி அளவில் தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் இருந்து துவங்கி கோர்ட் ரவுண்டானா, தலைமை தபால் நிலையம், டிவிஎஸ் டோல்கேட், எஸ்ஆர்எம் ஹோட்டல் வழியாக ஜமால் முகமது கல்லூரியில் நிறைவடைகிறது. போட்டிகளை காவல்துறை உயர் அதிகாரிகள் தொடங்கி வைக்க உள்ளனர். வெற்றி பெற்றவர்களுக்கு ₹.3 லட்சம் மொத்த பரிசு தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பரிசளிப்பு விழா ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் 6000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர் என தெரிவித்தனர்.
Comments are closed.