தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் குருதிக் கொடை வழங்கப்பட்டது.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் குருதிக் கொடை வழங்கப்பட்டது.
திருநெல்வேலியில், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்காக, நீதி கேட்டு போராடி உயிர் நீத்த, 17 தமிழர்களின் நினைவாக, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், குருதிக் கொடை வழங்கப்பட்டது!
திருநெல்வேலி,ஜூலை.22:-கடந்த 1999-ஆம் ஆண்டு, ஜூலை 23-ஆம் தேதி மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைக்காக, திருநெல்வேலியில் நடத்திய பேரணியில், காவல் துறையினர் நடத்திய தடியடியில், 17 தமிழர்கள் “தாமிரபரணி” நதியில், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர் .
இந்தநிகழ்வின், 26-ஆம் ஆண்டு “நினைவேந்தல்” நிகழ்ச்சி, நாளை [ஜூலை.23] திருநெல்வேலியில் நடைபெறோகிறது. காங்கிரஸ், பாஜக, திமுக, அதிமுக, அமமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், வி.சி.க.உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், நெல்லை கொக்கிரகுளம் “தாமிரபரணி” ஆற்றில் “நினைவு அஞ்சலி” செலுத்துகின்றனர். இந்த “நினைவேந்தல்” நிகழ்ச்சியை முன்னிட்டு, மனித உயிர்களைக் காக்கும் பொருட்டு, “தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்” சார்பில், பாளையங்கோட்டை “ஹைகிரவுண்ட்” பகுதியிலுள்ள, திருநெல்வேலி “அரசு” மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில்,
இன்று [ ஜூலை.22] மண்டலத்
தலைவர் கண்மணி மாவீரன் வேளாளர் தலைமையில், 30 பேருக்கும் மேற்பட்டோர், “குருதிக்கொடை” [ரத்த தானம்” வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில், மாநகர் மாவட்ட இணைச் செயலாளர் சின்னத்துரை பாண்டியன், மாநகர் மாவட்ட இளைஞர் அணித் தலைவர் மணிமாறன், கருங்குளம் ஒன்றிய செயலாளர் சண்முகராஜ், மாநகர் மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் பொன் முருகன், பாளையங்கோட்டை பகுதி செயலாளர் விஜயகுமார், அணி நிர்வாகிகள் உலக நாதன், வைஷ்ணவி, சூர்யா உட்பட, பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.