நடிகர் ரஜினியுடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துரையாடல்

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைதளத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்தது குறித்து பதிவிட்டுள்ளார் அதில்


இந்தியாவின் பத்ம விபூசண்!
தாதா சாகிப் பால்கே விருது பெற்ற கலைஞன், ஆறிலிருந்து ஐம்பது வரையில் அனைவருக்குமான சூப்பர் ஸ்டார் அண்ணன் திரு. @rajinikanth அவர்களை இன்று அவர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினேன்.
அவர் வாழ்த்துக்களைப் பெற்று மகிழ்ச்சி அடைந்தேன்! அரை நூற்றாண்டு காலம் இந்திய திரையுலகை ஆண்ட கலைஞன், நெற்றியில் திருநீறும் நெஞ்சத்தில் தேசப்பற்றும் என்றும் அழியாமல் காட்சி தரும் தேசிய நடிகர்!
அண்ணன் திரு. ரஜினிகாந்த் அவர்கள் இன்னும் பல நூற்றாண்டு காலம் திரை உலகை ஆண்டு தாயகப் பணி ஆற்ற வேண்டும் என இறைவனை பிரார்த்தனை செய்து, அவரை வாழ்த்தி வணங்குகிறேன். என்று பதிவிட்டுள்ளார்





Comments are closed.