மன்சூர் அலிகான் மீது காவல் துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக தேசிய மகளிா் அணித் தலைவா் வானதி சீனிவாசன்
மன்சூர் அலிகான் மீது காவல் துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக தேசிய மகளிா் அணித் தலைவா் வானதி சீனிவாசன்
நடிகை த்ரிஷா குறித்து இழிவாக பேசிய மன்சூர் அலிகான் மீது காவல் துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக தேசிய மகளிா் அணித் தலைவா் வானதி சீனிவாசன் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.
லியோ படத்தில் நடித்தது குறித்து பேசிய மன்சூர் அலிகான் த்ரிஷா குறித்து மிகவும் சர்ச்சையான கருத்துகளைக் கூறினார். மன்சூர் அலிகானின் இந்த கருத்துக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
நடிகை த்ரிஷா, நடிகை மாளவிகா மோகனன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கமும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் நடிகை த்ரிஷா குறித்து இழிவாக பேசிய மன்சூர் அலிகான் மீது காவல் துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக தேசிய மகளிா் அணித் தலைவா் வானதி சீனிவாசன் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், நடிகை த்ரிஷா குறித்து பேட்டி ஒன்றில் மன்சூர் அலிகான் அருவருக்கத்தக்க வகையில் பேசியிருக்கிறார். சுயவிளம்பரத்திற்காக இது போன்று செயல்படும் நபர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.
நடிகை த்ரிஷா குறித்து இழிவாக பேசிய மன்சூர் அலிகான் மீது காவல் துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.