- Advertisement -

கருப்பு உளுந்து சாப்பிடுவதில் மூலம் வரும் நன்மைகள்.

- Advertisement -

கருப்பு உளுந்து சாப்பிடுவதில் மூலம் வரும் நன்மைகள்.

ருப்பு உளுந்தில் நாம் இட்லி, தோசை மாவு அரைப்போம். அப்படிப்பட்ட கருப்பு உளுந்தில் பல சத்துக்களும் பல ஆரோக்கிய நன்மைகளும் உள்ளதா!

செரிமான திறன்:

Vagai

 கருப்பு உளுந்தில் நார்ச்சத்து அதிகம் கொண்டது. செரிமான உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மலம் கட்டிக்கொள்ளாமல் இலகுவாக வெளியேறவும் கருப்பு உளுந்து வழிவகை செய்கிறது. செரிமான திறனும் மேம்படுகிறது.

இரத்த சோகை: 

உணவில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டால் பெரும்பாலான குழந்தைகளுக்கு அனீமியா எனப்படும் இரத்த சோகை நோய் உருவாகிறது. கருப்பு உளுந்தில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. கருப்பு உளுந்து கொண்டு செய்யப்படும் உணவுகளை குழந்தைகளுக்கு அடிக்கடி உண்ணக் கொடுப்பதால் நோய் விரைவில் தீரும்.

எலும்புகள்: 

நமக்கு வயது ஏற ஏற நமது உடலில் உள்ள எலும்புகளும் மூட்டு பகுதியிலும் வலிமை குன்றி உடல் இயக்கத்தை குறைத்து விடும். கருப்பு உளுந்தில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்துக்கள் அதிகம் உள்ளன. கருப்பு உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள் மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும். ஆர்த்ரைடீஸ், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கும்.

Bismi

நீரிழிவு நோய்: 

நார்ச்சத்து நிறைந்த உணவுகளை நீரிழிவு நோய் ஏற்பட்டவர்கள் சாப்பிட வேண்டும். கருப்பு உளுந்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த நார்ச்சத்து நாம் சாப்பிடும் எந்த வகையான உணவுகளிலும் இருக்கும் சத்துக்களை சரி செய்து உடலின் சர்க்கரை அளவை மிதமான அளவில் வைக்க உதவுகிறது.

இதயம்: 

நமது இதயம் நன்றாக இருக்க நமது உணவில் கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து அதிகம் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். இந்த சத்துக்கள் அனைத்தும் நிறைந்த கருப்பு உளுந்து கொண்டு செய்த உணவுகளை சாப்பிடுவதால் நமது இதயத்திற்கு செல்லும் இரத்த நாளங்கள் மற்றும் இதயத்தின் ஆரோக்கியத்தை உறுதி செய்து இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் காக்கிறது.

நரம்பு பிரச்னைகள்:

 இன்று பெரும்பாலானவருக்கு மன அழுத்தம் மிகுந்த ஒரு வாழ்க்கை முறை இருக்கிறது. இதனால் மூளை மற்றும் உடலில் இருக்கும் நரம்புகளில் அழுத்தம் ஏற்பட்டு நரம்பு தளர்ச்சி, தூக்கமின்மை போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. கருப்பு உளுந்து கொண்டு செய்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதால் நரம்பு மண்டலத்தை ஆசுவாசப்படுத்தி நரம்பு தளர்ச்சி, தூக்கமின்மை மற்றும் மன அழுத்தங்கள் போன்றவற்றை நீக்குகிறது.

உளுந்து சிறந்த மருந்தாகும். உளுந்தை களியாகவோ கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாகக் கொண்டு வந்தால் தேகம் வலுப்பெறும். .

நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கும் பருவம் அடைந்த பெண்களுக்கும் கண்டிப்பாக ஊட்டச்சத்து அதிகம் தேவை. இவர்களுக்கு உளுந்தை கஞ்சியாக செய்து கொடுத்துவந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இடுப்பு வலி குணமாகும்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்