திருச்சியில் சிறுதானியத்தின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி – 300 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு!
சிறுதானியத்தை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி திருச்சியில் இன்று நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி நீதிமன்றம் எம்ஜிஆர் சிலை அருகே நிறைவடைந்தது. இதில் திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ரமேஷ் பாபு உள்பட 300-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிறுதானியத்தின் பயன்கள் குறித்த பதாகைகளை கையில் ஏந்தி பேரணியாக சென்றனர்.