- Advertisement -

தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் சார்பில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

- Advertisement -

தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் சார்பில், ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் ஆலத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு பூச்சிக்கொல்லி மருந்துகளின் நச்சுத்தன்மை வகைப்பாட்டு விளக்கப்படம் குறித்த விழிப்புணர்வு மற்றும் செயல்விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இறுதியாண்டு மாணவி ரலிஷா, உலக சுகாதார அமைப்பு (WHO) அடிப்படையில் பூச்சிக்கொல்லி மருந்துகள் மனிதர் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தும் நச்சுத்தன்மையின் அளவைப் பொருத்து வகைப்படுத்தப்படுவதை விளக்கினார்.

Vagai

அதன்படி சிவப்பு நிறம் – மிக அதிக நச்சுத்தன்மை (Extremely Hazardous)
மிகக் குறைந்த அளவே உயிருக்கு ஆபத்தானது.

மஞ்சள் நிறம் – அதிக நச்சுத்தன்மை (Highly Hazardous)
மிகுந்த கவனத்துடன் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

Bismi

நீல நிறம் – மிதமான நச்சுத்தன்மை (Moderately Hazardous)
பொதுவாக விவசாயத்தில் அதிகம் பயன்படுத்தப்படுவது.

பச்சை நிறம் – குறைந்த நச்சுத்தன்மை (Slightly Hazardous)
பாதுகாப்பு முறைகளை பின்பற்றினால் ஆபத்து குறைவாக இருக்கும்.

மேலும், பூச்சிக்கொல்லி மருந்துகளை சரியான முறையில் பயன்படுத்தினால் மனித உடலுக்கு தீங்கு இல்லை என்றும், பயன்படுத்தும் முன் அதன் நச்சுத்தன்மை வகையை கண்டறிந்து, பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்றும் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்த ஊரக வேளாண்பணி அனுபவத்தின் மூலம் மாணவிகள் நடைமுறை அனுபவம் பெறுவதோடு, விவசாய சமூகத்திற்கு பயனுள்ள அறிவையும் வழங்கி வருகின்றனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்