- Advertisement -

வயலூர் சாலையில் புதிதாக திறக்கப்படவுள்ள டாஸ்மாக் மதுபானக்கடையை முற்றுகையிட்டு அமமுகவினர் பொதுமக்களுடன் இணைந்து போராட்டம்!

- Advertisement -

போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும் திருச்சி வயலூர் பிரதான சாலையில், சீனிவாச நகர் பகுதியில் ஏற்கனவே இயங்கி வந்த டாஸ்மாக் மதுபானக்கடை, பொதுமக்களின் போராட்டத்தினால் மூடப்பட்டது. இந்நிலையில் அதேபகுதியில் புதிதாக 12 மணி நேரமும் செயல்படக்கூடிய மனமகிழ்மன்றம் மதுபானக்கடையினை திறக்க மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

திருச்சி மக்களின் அடிப்படை தேவையைப் பூர்த்தி செய்யாமல் டாஸ்மாக் மதுபானக்கடையை திறப்பதிலும், மக்களை குடிக்கவைப்பதிலேயே குறியாக மாவட்ட நிர்வாகம் செயல்படுவதாக குற்றம்சாட்டி, புதிதாக திறக்கப்பட உள்ள டாஸ்மாக் மதுபானக்கடையை முற்றுகையிட்டு அமமுகவினர் பொதுமக்களுடன் இணைந்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Vagai
Bismi

முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அதேநேரம் மக்களை பாதிக்கும் டாஸ்மாக் கடையை மூடும்வரை தங்களது போராட்டம் தொடரும், திருச்சியில் பொதுமக்கள் அதிகம் கூடும் 18 இடங்களில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகவும் போராட்டம் நடத்துவோம் என்றும் எச்சரிக்கையுடன் தெரிவித்தனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்