அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி குறித்து அவதூறு பேசியதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை கண்டித்து அவரது உருவ படத்தை செருப்பால் அடித்தும், தீ வைத்து எரித்தும் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை முன்பு நடந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர். மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான ரத்தினவேல், மகளிர் அணி மாவட்ட செயலாளர் நசீமா பாரிக், மாவட்ட துணை செயலாளர் வனிதா, மாவட்ட மகளிர் அணி துணை தலைவி புவனேஸ்வரி மற்றும் பகுதி செயலாளர்கள் அன்பழகன், ரோஜர், ஐடி விங் மாவட்ட செயலாளர் வெங்கட் பிரபு, திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் வழக்கறிஞர் சேது மாதவன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
Comments are closed.