திருச்சி மாநகராட்சி 14 வது வார்டு மாமன்ற உறுப்பினரும், புரட்சி தலைவி அம்மா பேரவை திருச்சி மாவட்ட செயலாளர் கார்த்திகேயனின் தம்பியுமான சி.அரவிந்தன் அவர்களை அதிமுக மாநில புரட்சித்தலைவி அம்மா பேரவை துணை செயலாளராக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
அரவிந்தன் திருச்சி டிடி ஏரியா சினிமா வினியோஸ்தர்கள் சங்க துணைத் தலைவராகவும், 14வது வார்டு மாமன்ற உறுப்பினராகவும் சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறார். மேலும் இவர், பொது மக்களின் அடிப்படை தேவைகளான சாலை வசதி, குடிநீர் வசதி, மின் வசதி போன்றவற்றை தனது வார்டு மக்களுக்கு சிறப்பான முறையில் ஏற்படுத்தி தருவதோடு மட்டுமல்லாமல், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அன்னதான நிகழ்ச்சிகளையும் சிறப்பாக நடத்தி வருகிறார். இவரது மக்கள் பணியினை பாராட்டி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இவருக்கு மாநில அளவிலான பதவியை வழங்கியுள்ளார். இந்நிலையில் புதிதாக பதவியேற்ற அரவிந்தன் அவர்களுக்கு அதிமுக மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.