- Advertisement -

ஆவின் நிறுவன பங்கு முதலாக மாற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும் – பால் உற்பத்தியாளர்கள் மண்டல செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!

- Advertisement -

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் மண்டல செயற்குழு கூட்டம் மாநில இணை செயலாளர் கணேசன் தலைமையில் திருச்சியில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் பழனியப்பன் வரவேற்புரை ஆற்றினார். மாநில செய்தி தொடர்பாளர் ராஜு, மாநில துணைத்தலைவர் ஹரிஹரன், மாநில செயலாளர் பெரியண்ணன், மாநில துணைத்தலைவர் கோவிந்த பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த செயற்குழு கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் மாநில தலைவர் ராஜேந்திரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் இந்த கூட்டத்தில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த நலச்சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Vagai
Bismi

இந்த கூட்டத்தில் ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு கோருதல், ஆவினுக்கு பால் வழங்கும் உற்பத்தியாளர்களுக்கு தமிழக அரசின் நிதியிலிருந்து வழங்குகின்ற ஊக்கத்தொகை பட்டுவாடா குறித்தும், ஆவின் பால் கொள்முதலில் ஐஎஸ்ஐ ஃபார்முலா அமல்படுத்த கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் பால் நுகர்வோருக்கு லிட்டருக்கு ரூபாய் 3 விற்பனை விலையை குறைத்து ஆவின் நிறுவனம் பால் விற்பனை செய்யும் என தமிழக அரசு சார்பில் அறிவித்தார்கள். அதன்படி ஆவின் நிறுவனம் தனது பால் விற்பனை விலையை குறைத்து வழங்கி வருவதால் இதுவரை சுமார் 1300 கோடிக்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே ஆவின் நிறுவனத்தின் இதுவரையிலான வருவாய் தமிழக அரசிடம் இருந்து பெற்று தர பால்வளத்துறை அமைச்சர் முயற்சி எடுக்க வேண்டும். ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கி வருகின்ற ஊக்க தொகையை ஆவின் நிறுவனத்தின் பங்கு முதலாக மாற்றுகின்ற அரசு அதிகாரிகளின் நடவடிக்கைகளை தவிர்த்திட வேண்டும். கால்நடை மருந்தகங்களில் மருத்துவ உதவியாளர்கள் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்