திருச்சியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உருவ பொம்மையை எரித்து திமுகவினர் போராட்டம்!

மக்களவையில் இன்று பி.எம் ஸ்ரீ திட்டம் தொடர்பாக தமிழக எம்பிக்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “திமுகவினர் தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை நாசமாக்குகிறார்கள். மொழி பிரச்சனைகளை தூண்டுவது மட்டுமே அவர்களின் வேலை. இந்த விவகாரத்தில் அரசியல் செய்கிறார்கள். இவர்கள் ஜனநாயகத்திற்கு விரோதமானவர்கள், நாகரிகமற்றவர்கள்” என பேசியிருந்தார். இதற்கு தமிழக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

Bismi

இந்நிலையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து, திருச்சி மத்திய மாவட்ட திமுக சார்பில், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை முன்பு, அவரது உருவ பொம்மையை எரிக்கும் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். திமுக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாநகராட்சி மேயர் அன்பழகன் உட்பட திமுகவினர் பலர் கலந்து கொண்டு மத்திய அமைச்சரின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்