திருச்சியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ₹.27.90 கோடி மதிப்பீட்டில், 2500 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா – அமைச்சர்கள் பங்கேற்பு!

0

- Advertisement -

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி அரியமங்கலம் எஸ்.ஐ.டி கல்லூரியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பல்வேறு திட்டப்பணிகள் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு புதிய திட்டப்பணிகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

- Advertisement -

இந்நிகழ்வில் பல்வேறு துறைகளின் சார்பில் ரூ. 3.95 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட 09 கட்டடங்களை திறந்து வைத்தும், ரூ. 12.91 கோடி மதிப்பீட்டில் 03 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், விலையில்லா வீட்டுமனை பட்டாக்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை ரூ. 27.90 கோடி மதிப்பீட்டில் 2,539 பயனாளிகளுக்கும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்