பாரத பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் என்னை பற்றி பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது –  தஞ்சாவூரை சேர்ந்த மணிமாறன் பேட்டி!

- Advertisement -

பாரத பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் என்னை பற்றி பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது –  தஞ்சாவூரை சேர்ந்த மணிமாறன் பேட்டி!

- Advertisement -

பல நூற்றாண்டுகளாக ஓலைச்சுவடிகள் வடிவிலே பாதுகாக்கப்பட்டிருக்கும் ஞானம்தான் நமது மெய்யான சக்தியாகும். இந்த ஓலைச்சுவடிகளிலே விஞ்ஞானம் உள்ளது, சிகிச்சை முறைகள் இருக்கின்றன, இசை இருக்கிறது, தத்துவம் உள்ளது, அனைத்திலும் முக்கியமான விஷயம் என்னவென்றால், மனித சமூகத்தின் எதிர்காலத்தை எப்படி ஒளிமயமானதாக ஆக்கமுடியும் என்பதைப் பற்றிய சிந்தனைதான் அது.

 

இப்படிப்பட்ட அசாதாரணமான ஞானத்தை, இந்த மரபினைப் போற்றிப் பாதுகாப்பதுதான் நமது மிகப்பெரிய பொறுப்பாகும். நமது தேசத்தின் ஒவ்வொரு காலகட்டத்திலும், தங்களுடைய சாதனையாகவே ஆக்கியவர்கள் இருந்து வந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட கருத்தூக்கம் அளிக்கும் ஆளுமைகளில் ஒருவர் தான் தமிழ்நாட்டின் தஞ்சாவூரைச் சேர்ந்த மணிமாறன்.

 

தஞ்சாவூரைச் சேர்ந்த மணிமாறன் என்பவர் மாணவர்களுக்கு, தமிழ் ஓலைச்சுவடிகளை படிக்கும் பயிற்சி வகுப்பு எடுத்து வருகிறார். நேற்று நடைபெற்ற மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இவரை குறிப்பிட்டு பேசியுள்ளார்.

 

இது குறித்து தஞ்சாவூரை சேர்ந்த மணிமாறன் நம்மிடம் பேசுகையில்,….

 

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று பாரத பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றுவார். அப்போது சிறந்த பணியாற்றக் கூடியவர்களை பாராட்டி பேசுவார். அந்த வகையில் நேற்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி என்னை பற்றி குறிப்பிட்டு பேசியது மகிழ்ச்சிக்குரியது. நான் இதை நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை.

 

பல ஆண்டுகளாக தொல்லியல், வரலாறு, சுவடியல் போன்ற துறைகளில் ஆய்வு செய்வது, அதை பற்றிய செய்திகளை வெளிக்கொண்டு வருவது, மாணவர்களுக்கு அதைப்பற்றி பயிற்சி அளிப்பது போன்ற பணிகளில் நான் ஈடுபட்டு வருகிறேன். மேலும் எங்களுடைய நூலகத்தின் வழியாகவும் பல ஆண்டுகள் இந்த பணியை செய்து வருகிறேன்.

 

தற்போது மாலை நேர பயிற்சி வகுப்பு எடுத்து வருகிறேன். அதில் மாணவர்களுக்கு தமிழ் சுவடிகள் படிப்பது குறித்து பயிற்சி அளித்து வருகிறேன்.

 

பிரதமர் மோடி என்னை பற்றி எப்படி அறிந்து கொண்டார் என தெரியவில்லை. இன்றைய மனதின் குரல் நிகழ்ச்சியில் என்னைப்பற்றி குறிப்பிட்டது மன நிறைவாக இருக்கிறது. எனது உழைப்பிற்கு என்றாவது ஒருநாள் அங்கீகாரம் கிடைக்கும் என நம்பி இருந்தேன். பாரத பிரதமருக்கு மனம் நிறைந்த நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

 

சுவடிகளில் இருக்கக்கூடிய செய்திகள் என்பது தமிழர்களுடைய பாரம்பரியம் சார்ந்த பல நூற்றாண்டு கால அரிய செய்திகள். இதில் மருத்துவ குறிப்புகள், வரலாற்று செய்திகள், தொழில்நுட்பம் குறித்த தகவல்கள் உள்ளிட்ட பல செய்திகள் கொட்டிக்கிடக்கிறது. கிட்டதட்ட 25 லட்சத்திற்கும் மேற்பட்ட சுவடிகள் நம்மிடையே உள்ளது. அதில் உள்ள செய்திகள் எல்லாம் இன்னும் நிறைய வெளிக்கொணர வேண்டி உள்ளது. அதற்கு தனி ஒருவனாக நான் மட்டும் படித்து வெளியிடுவது சாத்தியம் இல்லாத ஒன்று. அதுபோல சுவடிகளை படிப்பதற்கான மாணவர்களை நாம் உருவாக்கினால் எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும் என்ற வகையில் இந்த பணியை தொடர்ந்து செய்து வருகிறேன்.

 

பிரதமர் வாழ்த்துறையில் எனது பெயர் வந்தது இந்த பணிக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறேன்.

 

இதை கற்றுக்கொள்ள வரும் மாணவர்களின் எண்ணிக்கை என்பது மிகவும் குறைவுதான். அதற்கு காரணம் அவர்களுக்கான பணி வாய்ப்பு என்பது குறைவு. நல்ல ஊதியத்துடன் பணி வாய்ப்பு வழங்கப்பட்டால் நிச்சயம் மாணவர்கள் இதை கற்றுக்கொள்ள அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். என்னிடம் பயிற்சி பெற்ற 30 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு இடங்களில் பணி புரிந்து வருகின்றனர்.

 

ஐடி துறையில் கிடைக்கும் ஊதியம் அளவிற்கு இவர்களுக்கு கிடைக்காது. ஊதியம் அதிகமாக கிடைத்தால் அதிகளவில் மாணவர்கள் கற்றுக்கொள்ள வருவார்கள் என தெரிவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்