கல்வி கண் திறந்த காமராஜர் பிறந்தநாள் விழா – இனாம் பெரியநாயகி சத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளி
கல்வி கண் திறந்த காமராஜர் அவர்களின் 123வது பிறந்தநாள் விழா – இனாம் பெரியநாயகி சத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளி
திருச்சி மாவட்டம் இனாம் பெரியநாயகி சத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வி கண் திறந்த காமராஜர் அவர்களின் 123 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது .
இவ்விழாவில் அனைத்து மாணவர்களுக்கும் வகுப்பு வாரியாக பேச்சுப்போட்டி ,கட்டுரை போட்டி ,மாறுவேட போட்டி ,கவிதை போட்டி, போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன .
கல்வி கண் திறந்த காமராஜர் அவர்களுடைய வரலாற்று நிகழ்வினை இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. நஅழகு சுப்பிரமணியன் அவர்கள் எடுத்துப் பேசினர் ,கர்மவீரர் காமராஜர் அவர்களின் எண்ணத்தை ஈடேற்றும் வகையில் இப்பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் இன்று மதியம் அறுசுவை உணவு வழங்கப்பட்டு கர்மவீரர் காமராஜர் அவர்களின் திரைப்படத்தை திரையிடப்பட்டு அதிலிருந்தும் கேள்விகள் கேட்கப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு குவியல்களை வாரி வழங்கினார்கள் இப்பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும்.
இவ்விழாவின் சிறப்பு விருந்தினர்களாக பெரியாலம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு சிவகுமார் அவர்களும், சமுத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திரு ராஜசேகரன் அவர்களும் ,யாகப் புடையான் பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு சரவணன் அவர்களும், ஓந்தாம் பட்டி கணித பட்டதாரி ஆசிரியர் திரு முனியசாமி அவர்களும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திரு அன்பழகன் அவர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் விழாவில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களும் ,பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்களும், முன்னாள் மாணவர்கள் அனைவரும் வருகை தந்து விழாவை சிறப்பித்தனர் . இறுதியில் இப்பள்ளியின் கணித பட்டதாரி ஆசிரியர் திருமதி நந்தினி. அவர்கள் நன்றியறை கூறினர்
Comments are closed.