- Advertisement -

திருச்சியில் ஒருங்கிணைந்த பஞ்சப்பூர் பேருந்து முனையம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது – பேருந்து சேவையை அமைச்சர் கே.என்.நேரு கொடியசைத்து தொடக்கி வைத்தார்

- Advertisement -

திருச்சியில் ஒருங்கிணைந்த பஞ்சப்பூர் பேருந்து முனையம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது – பேருந்து சேவையை அமைச்சர் கே.என்.நேரு கொடியசைத்து தொடக்கி வைத்தார்

 

திருச்சி மாநகரம் பஞ்சப்பூரில் கட்டப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பேருந்து முனையத்தை கடந்த மே மாதம் 9 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிலையில் அந்த பேருந்து முனையம் இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பேருந்து முனையத்திலிருந்து பேருந்து சேவைகளை கொடியசைத்து தொடக்கி வைத்தார். தொடர்ந்து பேருந்தில் பயணித்த பயணிகளிடம் கலந்துரையாடினார். இந்த நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையத் மது பாலன், திருச்சி காவல் ஆணையர் காமினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

பேருந்து சேவைகளை தொடக்கி வைத்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு

Vagai

Bismi

மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் பேருந்து நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்வதற்கு கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்க படாது. சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையம் இரண்டும் பயன்பாட்டில் தான் இருக்கும். நகரப் பேருந்துகள் அங்கிருந்து இயக்கப்படும் மேலும் கரூர் அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்களில் செல்லும் பேருந்துகள் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.

நகரப் பேருந்துகள் அனைத்தும் மத்திய பேருந்து நிலையம் வந்து பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் வகையிலேயே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.

பஞ்சப்பூர் பேருந்து நிலையம் மிகவும் அழகாகவும் சுத்தமாகவும் இருப்பதாகவும் இதனால் திருச்சி மாவட்டத்தின் போக்குவரத்து நெரிசல் குறையும் எனவும் பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்