திருச்சி விமான நிலையத்தில் ₹.12 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல்!

- Advertisement -

திருச்சி விமான நிலையத்தில் ₹.12 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல்!

 

- Advertisement -

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு சிங்கப்பூர், மலேசியா, துபாய், வியட்நாம், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பயணம் செய்யும் பயணிகள் தங்கம், வெளிநாட்டு சிகரெட், கஞ்சா உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கடத்தி வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் பேங்காக்கில் இருந்து கோலாலம்பூர் வழியாக கடந்த 7 ஆம் தேதி இரவு திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ஒரு பயணியின் உடைமையில் 11.8 கிலோ எடை கொண்ட, 28 பாக்கெட்டுகள் உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சாவை, மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு சுமார் ₹.12 கோடி என தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள் பயனியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்