- Advertisement -

திருச்சியில் சில குடும்பங்களை மட்டும் தொடர்ந்து புறக்கணித்து வரும் கலிபா பள்ளிவாசல் நிர்வாகம் மீது  நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வக்பு வாரிய அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்!

- Advertisement -

திருச்சி மாநகர் அரியமங்கலம் உக்கடை பகுதியில் செயல்பட்டு வரும் கலீபா பள்ளிவாசலுக்கு சொந்தமான மனையில் குடியிருக்கும் 10 குடும்பங்களை மட்டும் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ஊர் நீக்கம் செய்து தொடர்ந்து வஞ்சித்து வரும் கலீபா பள்ளிவாசல் நிர்வாகிகள் மீது பலமுறை புகார் தெரிவித்தும் திருச்சி மாவட்ட வக்பு வாரிய அதிகாரிகள் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்ச்சாட்டி, திருச்சி பாலக்கரை பகுதியில் இயங்கி வரும் வக்ஃபு வாரிய கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பள்ளிவாசலில் இருந்து ஊர் நீக்கம் செய்த இஸ்லாமியர்கள் இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Bismi

இது குறித்து இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில்,…

Vagai

70 ஆண்டுகளாக இந்த பகுதியில் வசித்து வருகிறோம். பள்ளிவாசல் வரவு செலவு கணக்கு கேட்டதினால் என்னுடன் சேர்த்து 10 குடும்பங்களை ஊர் நீக்கம் செய்துள்ளனர்.
குறிப்பாக ரம்ஜான் நோன்பு கஞ்சிக்கு பணம் வாங்க மறுத்தல் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளுக்கு எங்களை அழைப்பதில்லை. இது குறித்து வக்பு வாரிய ஆணையர் அலுவலகத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், காவல் ஆணையர் அலுவலகத்திலும் பலமுறை புகார்கள் கொடுத்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. கூடிய விரைவில் பள்ளிவாசல் தேர்தல் நடைபெற உள்ளது, அப்படி நடைபெற்றால் அதில் எங்களுக்கு ஓட்டு உரிமை கிடைக்க கூடாது என்பதற்காக எங்கள் குடும்பங்களை ஊர் நீக்கம் செய்துள்ளனர். இது குறித்து உடனடியாக தீர்வு காண வேண்டும். இல்லையெனில் தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்து அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்