- Advertisement -

திருச்சியில் ஜே.கே.சி அறக்கட்டளை சார்பில் 10 ஆயிரம் பேருக்கு தேசிய கொடியுடன், இனிப்பு வழங்கி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

0

- Advertisement -

திருச்சி ஜே.கே.சி அறக்கட்டளை மற்றும் சமூக அலுவலர்கள் சார்பில் இன்று காலை 8 மணி அளவில் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள காவல் உதவி மையத்தில் கொடியேற்றி காவலர் மற்றும் பொதுமக்களோடு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.


இந்நிகழ்ச்சி ஜே.கே.சி அறக்கட்டளை நிறுவனத் தலைவர் முனைவர் பா. ஜான் ராஜ்குமார் தலைமையில் பேராசிரியர் ரவி சேகர் முன்னில வகித்தார்.
மற்றும் சந்தான கிருஷ்ணன், நந்தகுமார், அம்பேத் சாக்ரடீஸ், வெங்கடேஷ் ராவ், கார்த்திக், நமச்சிவாயம், கதிரவன், பாலமுருகன், ரமேஷ், ஐசக், ஓய்வு பெற்ற உதவியாளர் மனிதநேயம் ஆரோக்கியசாமி, தலைமை காவலர்கள், உதவி ஆய்வாளர் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சி சிறப்பித்தனர்.

Vagai
Bismi


இந்நிகழ்ச்சியை தொடர்ந்து திருச்சி மத்திய பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகளுக்கு பத்தாயிரம் கொடிகள், இனிப்புகளுடன் வழங்கப்பட்டது, மேலும் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளிடையே சுதந்திர தினத்தை பற்றியும் சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளை பற்றியும் பயணிகளுக்கு எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார் .


இந்நிகழ்ச்சியை தொடர்ந்து மாலை 5.30வது மணி அளவில் பீமநகரில் உள்ள அலுவலகத்தில் 35 நபர்களுக்கு 75வது சுதந்திர தின விழாவை கொண்டாடு வண்ணமாக சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.


இதில் சிறப்பு விருந்தினராக வழக்கறிஞர் சி.பி.ரமேஷ், பேராசிரியர் சையத் ஜாகீர் அசின், திருச்சி வசந்தம் அரிமா சங்கத் தலைவர் டாக்டர் டி ஜி ஆர் வசந்தகுமார் மற்றும் மகளிர் அமைப்பை சார்ந்த சகுந்தலா, சந்தான கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்