- Advertisement -

அரசு பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய அமைச்சர் கே.என். நேரு. 

- Advertisement -

அரசு பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய அமைச்சர் கே.என். நேரு.

 

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியா நட்சத்திர ஹோட்டலில் திருச்சி மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸ் கிளையின் சார்பாக அரசு பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், திருச்சி மலபார் கோல்ட் மற்றும் டைமண்ட் கிளை தலைவர் ஜோசப் பியூஸ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸ் (கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு) சார்பாக ஆண்டுதோறும் அரசு பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இது நான் தொடர்ந்து இந்த ஆண்டு அரசு பள்ளி மாணவிகளின் நலனுக்காகவும் அவரின் கல்வி இணைவும் வாழ்க்கை தரத்தையும் உயர்த்துவதற்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் 16 பள்ளிகளை சேர்ந்த 127 மாணவிகளுக்கு மலபார் குழுமம் சார்பாக சுமார் ரூ 11,16,000 மதிப்பிலான காசோலையை தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு மாணவிகளுக்கு வழங்கினார்.

 

Vagai

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு கூறியது..

 

திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக அடிப்படை வசதிகள் அனைத்தையும் தரமாக அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் முடிவுற்று மக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளோம்.

 

Bismi

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தை அகற்றி அந்த இடத்தில் வணிக வளாகம் கட்டப்படும் என தகவல்கள் வெளியாகி இருந்தது. இதற்கு பதில் அளித்த அமைச்சர் நேரு..

 

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தை ஒருபோதும் அகற்ற மாட்டோம் எப்போதும் போல் வழக்கமாக மக்கள் பயன்பாட்டிற்கு பேருந்து நிலையம் ஆகவே செயல்படும் என தெரிவித்தார்.

 

மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்கவில்லை. பட்ஜெட்டில் கூட தமிழ்நாடு என்ற பெயர் இல்லை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்கள்.

 

மும்முள்ளிக் கொள்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தெரிவித்துவிட்டோம் ஆகையால் தான் மத்திய அரசு நிதி வழங்க மறுக்கிறது.

 

பறவைகள் பூங்கா கட்டணம் விலை குறைப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் முடிவு எடுப்பார்.

 

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியது எதுவும் நடக்க போவதில்லை மீண்டும் திராவிட மாடல் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் என்றார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்