தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 26.06.2022 அன்று 3743 வழக்குகளுக்கு தீர்வுகாணப்பட்டது.
மாவட்ட சட்டப பணிகள் ஆணைக குழு, திருச்சிராப்பள்ளி
தேசிய மக்கள் நீதிமன்றம்
26.06.2022 வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு (NALSA), புதுடெல்லி மற்றும்,தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு, சென்னையின் வழிகாட்டுதலின்படி, திருச்சிராப்பள்ளி மாவட்ட சட்டப் பணிகள்
ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமாகிய
திரு.K.பாபு அவர்களின்
உத்தரவின்படியும், தேசிய மக்கள் நீதிமன்றம் இன்று 26.06.2022-ந் தேதி திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்
உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றங்களில் 12 மக்கள் நீதிமன்ற அமர்வுகளும்
முசிறி, துறையூரில், இலால்குடி, மணப்பாறை, ஸ்ரீரங்கம் மற்றும் தொட்டியம் ஆகிய நீதிமன்றங்களில் தலா
ஒரு மக்கள் நீதிமன்ற அமர்வுகள் என மொத்தம் 12 அமர்வுகளில், தேசிய மக்கள் நீதிமன்ற
விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்குகளில் சம்மந்தப்பட்ட இரு தரப்பினர்களையும் அழைத்து
சமரசமுறையில் பேசி பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டது.
இந்நீதிமன்றங்களில் ஏற்கனவே நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகள், சமரசம்
செய்யக்கூடிய குற்றவியல் வழக்குகள், ஜீவனாம்சம் கோரிய வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள்,
மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு கோரிய வழக்குகள், தொழிலாளர் நல
தீர்ப்பாயத்தில்
நஷ்டஈடு கோரிய வழக்குகள்,அரசு நிலஆர்ஜீத சம்மந்தப்பட்ட இழப்பீடு, போன்ற பலதரப்பட்ட
வகையான வழக்குகளில், பங்கேற்ற இருதரப்பினர்களிடையே மக்கள் நீதிமன்றங்களில், சமரச முறையில
பேசி நிரந்தர தீர்வு காணப்பட்டது. மேலும் வங்கிகளின் வாரா கடன் வழக்குகள் மற்றும் காசோலை
மோசடி வழக்குகளும் ஆக மொத்தம் சுமார் 8000 வழக்குகளுக்கு மேல் சமரசமுறையில் தீர்வுகாண
பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஓவ்வொரு மக்கள் நீதிமன்ற அமர்விலும் தற்போது பணியில்
உள்ள மாவட்ட நீதிபதி மற்றும் சார்பு-நீதிபதிகள் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை
நடுவர்கள் தலைமையில், கமிட்டி செயல்பட்டு, இருதரப்பினரையும் கலந்து ஆலோசித்து பல்வகை வங்கிக்
கடன் வழக்குகளில் ரூபாய் 3-கோடியே 37-இலட்சத்து 74-ஆயிரத்து 34-ரூபாய், நீதிமன்ற நிலுவையில்
இருக்கும ; வழக்குகளில் ரூபாய் 23-கோடியே 24-இலட்சத்து 20-ஆயிரத்து 141ரூபாய் என மொத்தம் ரூபாய்
26-கோடியே 61இலட்சத்து 94ஆயிரத்து 175ரூபாய் மதிப்பிலான வழக்குகளை சமரச முறையில்
வழக்காடிகள் பயன்பெறும் வகையில் இன்று 3743 வழக்குகளுக்கு தீர்வுகாணப்பட்டது.
மக்கள் நீதிமன்றத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருச்சிராப்பள்ளி மாவட்ட சட்டப்பணிகள்
ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதியுமாகிய திரு.K.பாபு அவர்களின்
ஆலோசனையின் படி, திருச்சிராப்பள்ளி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும்
மூன்றாவது கூடுதல் சார்பு நீதிபதியுமாகிய திரு.S.சோமசுந்தரம் அவர்கள் மக்களவையில் செய்து முடிக்கப்பட்டது.