பன்முகக் கலைஞர்கள் நலசங்கம் சார்பில், இயல் இசை நாடக கலைஞர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது!
பன்முகக் கலைஞர்கள் நலசங்கத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள நிர்வாகிகள் உறுப்பினர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு சங்கத்தின் நிறுவன தலைவர் திரைப்பட நடிகர் வேல்முருகன் தலைமையில், பொருளாளர் பகுருதீன் அலி அகமது வழிகாட்டுதலின்படி, மகளிர் அணி ஆலோசகர் விஜய்பிரேமா ஒருங்கிணைப்பில், தமிழ்நாடு ஏரோஸ்கேட்டோபால் சங்க தலைவர் ராகேஷ் சுப்ரமணியன் உதவியுடன் தமிழ்நாடு முழுவதும் வழங்கப்பட்டது.


அதன் ஒரு பகுதியாக திருச்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்விற்கு நிறுவனத் தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார். மகளிர் அணி தலைவி பொன்முடி பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக சங்கத்தின் கௌரவ தலைவரும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட தலைவருமான எஸ்.பி.பாபு கலந்து கொண்டு சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவருக்கும் பச்சரிசி, பாசி பருப்பு, வெல்லம், நெய், முந்திரி, திராட்சை, ஏலக்காய் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் அமைப்பாளர் பாரதி பொன்னுச்சாமி, துணைச் செயலாளர்கள் பாலமுருகன், அன்வர்தீன், அமைப்புச் செயலாளர் டூயட் சசிகுமார், துணை அமைப்புச் செயலாளர் செரி சுகுமார், திருச்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் மயில்வாகனம், மகளிர் அணி மக்கள் தொடர்பாளர் சுகன்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.





Comments are closed.