தீபாவளி பண்டிகையையொட்டி திருச்சி மாநகரில் சிசிடிவி கேமராக்களை கண்காணிக்கும் தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறையை காவல் ஆணையர் காமினி திறந்து வைத்தார்!

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வரும் 31 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு ஜவுளி, நகை உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக திருச்சி மாநகரின் முக்கிய வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதை பயன்படுத்தி தீபாவளி திருடர்கள் பல்வேறு இடங்களில் திருட்டு, நகை பறிப்பு உள்ளிட்ட சம்பவங்களிள் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் தீபாவளி திருடர்களை பிடிக்க மாநகர போலீசார் வழக்கம் போல சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். அதன்படி திருச்சி மாநகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், காந்தி மார்க்கெட் மற்றும் என்.எஸ்.பி. ரோடு, பெரிய கடைவீதி, சின்னகடைவீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் 185 ற்கும் மேற்பட்ட நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. மேலும் சிங்காரத்தோப்பு, மலைவாசல், நந்தி கோவில் தெரு உள்ளிட்ட ஆறு இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் அனைத்து கண்காணிப்பு கேமராக்களை கண்காணிக்கும் வகையில் தெப்பக்குளம் பகுதியில் தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து திருச்சி மாநகரில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து கண்காணிப்பு கேமராக்களையும் கண்காணிக்க முடியும். இந்த தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறையை திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் காவல் உயரதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்