திருச்சியில் விவேகானந்தா சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் சங்கத்தினர் ஆயுதபூஜை கொண்டாட்டம்!

நாடு முழுவதும் ஆயுத பூஜை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு தொழிற்சாலைகள், கல்வி நிலையங்கள், வியாபார ஸ்தலங்கள் கடைகள் மற்றும் வீடுகள் உள்பட பல்வேறு இடங்களில் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே விவேகானந்தா சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் சங்கம் சார்ப்பில் இன்று ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது.

- Advertisement -

அனைவரும் தங்களது கார் மற்றும் இருசக்கர வாகனங்ளை சுத்தம் செய்து மஞ்சள், குங்குமம் இட்டு, வாழை தோரனங்களால் அலங்கரித்து, தேங்காய் உடைத்து பூஜை செய்து வழிபட்டனர். இந்நிகழ்வில் சங்க தலைவர் மதியழகன், துணை தலைவர் நூர், செயலாளர் தியாகராஜன், பொருளாளர் ஆறுமுகம் உள்பட சங்கத்தினர் பலர் கலந்து கொண்டு ஆயுத பூஜையை சிறப்பாக கொண்டாடினர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்