சமூக விடுதலைக்காகப் போராடிய தியாகி இமானுவேல் சேகரனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு அமைச்சா் கே.என்.நேரு மற்றும் திமுகவினா் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். திருச்சி தில்லை நகா் சாஸ்திரி சாலையில் உள்ள திமுக முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் நடந்த நிகழ்வில் மத்திய மாவட்டச் செயலா் வைரமணி, மேயா் அன்பழகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ஆனந்த், மாநில மாணவரணி துணைச் செயலாளர் ஆனந்த், சோ்மன் துரைராஜ், மாமன்ற உறுப்பினா்கள், பகுதிச் செயலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Comments are closed.