திருச்சி மெத்தடிஸ்ட் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு!

தமிழ்நாடு அரசு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு எண்ணற்ற பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் சிறந்த முறையில் கல்வி பயிலும் வகையில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கி அவர்களது மேல்நிலைக் கல்வியை உறுதி செய்கிறது.

அந்த வகையில் திருச்சி உறையூர் பகுதியிலுள்ள அரசு உதவி பெறும் மெத்தடிஸ்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டிகளை மாணவிகளுக்கு வழங்கி சிறப்புரையாற்றினார்.

- Advertisement -

முன்னதாக செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, மெத்தடிஸ்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், முதன்மைக்கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, தலைமையாசிரியை வசந்தி மற்றும் மாநகராட்சி மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்