ரியல் எஸ்டேட் ஊழியர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் – நில வணிகர் நல சங்க ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்!

நில வணிகர் நலச்சங்கம் ( தமிழ்நாடு) மாநில பொதுக்குழு மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ அப்துல் நாசர் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் சுபாஷ், மாநில செயலாளர் நியாஸ் அகமது, மாநில பொருளாளர் எஸ்.ஏ. ரஹீம், மாநில கவுரவ தலைவர் பால்பாண்டியன், மாநிலத் துணைத் தலைவர்கள் குமார், ரியாஸ் பாஷா, சுப்பிரமணி, கம்பம் மனோகர், ஆரிப் ,முகமது யாசின், கார்த்திக், விபிஎஸ்.மகா, ராஜா, அபுல்ஹசன், சுரேஷ், கலந்தர் பஷீர், தேனி முருகன், சிராஜுதீன், கருமாரி கருணாகரன், கணேசன், ராஜா, அம்ஜத், தினகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

- Advertisement -

இந்த கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது, அதில்….

ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக சிவ்தாஸ் மீனாவை நியமித்த தமிழக முதல்வருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வது, நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்திலிருந்து வெற்றி பெற்ற அனைத்து எம்பிக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வது, ரியல் எஸ்டேட் ஊழியர்கள் மற்றும் மீடியேட்டர் நல வாரியம் அமைக்க தமிழக அரசை வலியுறுத்தி கேட்டு கொள்வது, சங்கத்தின் உறுப்பினர்களுக்கு ஆயுள் காப்பீடு மற்றும் மூத்த உறுப்பினர்களுக்கு பென்ஷன் பற்றி ஆலோசனை நடத்த மாவட்ட ரீதியாக குழு அமைப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதில் மாநில மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்