திருச்சி வேலன் மருத்துவமனையில் இலவச எலும்பு மூட்டு பரிசோதனை முகாம் – 100 க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

திருச்சி ஜெயில் கார்னர் பகுதியில் அமைந்துள்ள வேலன் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் இலவச எலும்பு மூட்டு பரிசோதனை முகாம் இன்று நடைபெற்றது. முகாமை மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ராஜவேல் தலைமையேற்று தொடங்கி வைத்தாா். இதில் ஆர்த்தோ மருத்துவர் சாந்தமூர்த்தி கலந்து கொண்டு, 40 வயதை கடந்தவர்கள், மாத விலக்கு நின்ற பெண்கள், மூட்டு வலி, இடுப்பு வலி, மூட்டு தேய்மானம், கை கால் வலி, கை கால் மரத்து போதல், முதுகு மற்றும் கழுத்து தண்டுவட நரம்பு வலி உள்ளவர்களுக்கு சிகிச்சை அளித்தார்.

- Advertisement -

மேலும் எக்ஸ்ரே, ரத்தப் பரிசோதனை, எலும்பு குறை கண்டறிதல், நரம்புத் தளா்ச்சி கண்டறிதல் போன்றவை மேற்கொள்ளப்பட்டு ஆலோசனை, மருந்துகள் வழங்கி, தேவையான பயிற்சிகளும் வழங்கப்பட்டன. மேலும் சிறப்பு முகாமை முன்னிட்டு 2500 ரூபாயில் செய்யக்கூடிய எலும்பு மூட்டு தேய்மானத்திற்கான அளவீடு 100 ரூபாய்க்கு செய்யப்பட்டது. இதில் திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து 100 க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு பயனடைந்தனா்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்