மகளிர் மகப்பேறு சங்கத்தின் 27 ஆம் ஆண்டு விழாவையொட்டி திருச்சியில் நடைபெற்ற கருத்தரங்கம் – 200 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்பு!

திருச்சி மகளிர் மகப்பேறு சங்கத்தின் 27 வது ஆண்டு விழாவை முன்னிட்டு மகப்பேறு மருத்துவர்களுக்கான பயிற்சி பட்டறை மற்றும் கருத்தரங்கம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் முதல்நாள் பயிற்சி பட்டறையும், இரண்டாம் நாளான இன்று கருத்தரங்கமும் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இந்திய மருத்துவ மன்றத்தின் தேசிய அளவிலான துணை தலைவர் டாக்டர் குணசேகரன் கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.

இந்த கருத்தரங்கில் மகளிர் மகப்பேறு மருத்துவத்தின் சிறப்புகள் மற்றும் புதிய தொழில் நுட்பம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும் இந்த விழாவில் சங்கத்தின் தலைவர் டாக்டர் தமிழ்ச்செல்வி, செயலாளர் டாக்டர் உமா வேல்முருகன், திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் அர்ஷியா பேகம் உள்பட தமிழகம் முழுவதும் இருந்து 200 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

- Advertisement -

 

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்