- Advertisement -

மணல் குவாரிகளை திறக்க வலியுறுத்தி மணல் லாரி உரிமையாளர் சம்மேளனம் மற்றும் மாட்டு வண்டி உரிமையாளர்கள் சங்கத்தினர் திருச்சியில் உண்ணாவிரத போராட்டம்!

- Advertisement -

தமிழகம் முழுவதும் இயங்கி வந்த அரசு மணல் குவாரிகளிலும் அரசு மணல் விற்பனை கிடங்குகளிலும் முறைகேடு நடந்ததாக கடந்த 12.09.2023 அன்று அமலாக்கத் துறையினர் சோதனை செய்து வழக்கு பதிவு செய்ததால் கடந்த ஒன்பது மாதங்களாக தமிழகம் முழுவதும் இயங்கி வந்த அனைத்து அரசு மணல் குவாரிகளும் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இத்தொழிலில் முழுநேரமும் ஈடுபட்டுள்ள 55000 மணல்லாரி உரிமையாளர்கள், லட்சக்கணக்கான லாரி ஓட்டுனர்கள், பல்லாயிரக் கணக்கான மாட்டுவண்டி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களுடைய வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

Bismi

Vagai

எனவே அனைத்து அரசு மணல் குவாரிகளையும் உடனடியாக இயக்கிட தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் மற்றும் மாட்டுவண்டி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருச்சி திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகே ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெற்றது. இந்த உண்ணாவிரத போராட்டத்தை தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் செல்ல ராசாமணி தலைமையேற்று சிறப்புரையாற்றினார். முன்னதாக துணை தலைவர் கே.ஆர்.டி.ரவிச்சந்திரன் போராட்டத்தை துவக்கி வைத்தார். மேலும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து மணல் லாரி உரிமையாளர்கள், மாட்டு வண்டி உரிமையாளர்கள், தொழிலாளர்கள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்