பன்முகக் கலைஞர்கள் சங்கம் செயற்குழு கூட்டத்தை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

0

பன்முகக் கலைஞர்கள் சங்கம் செயற்குழு கூட்டத்தை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

 

- Advertisement -

பன்முகக் கலைஞர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் சேலம் மாவட்ட தலைவர், செயற்குழு உறுப்பினர் பிரவீன் குமார் தலைமையில்,
சேலம் மாவட்டத் துணைத் தலைவர் அருள்குமார், சேலம் மாவட்ட செயலாளர் கோகுல்ராஜ் முன்னிலையில் நடைபெற்றது,
செயற்குழு கூட்டத்தை முன்னிட்டு மேக்ஸி விஷன் கண் மருத்துவமனை சார்பில் கண் பரிசோதனை முகாம் CSI ஹோபார்ட் துவக்க பள்ளியில் நடைபெற்றது,

முகாமில் மாணவ, மாணவிகள் பயன்பட்டனர் அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பன்முகக் கலைஞர்கள் சங்கத்தின்
நிறுவனர் தலைவர் வேல்முருகன், மாநில ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன், மாநில மக்கள் தொடர்பாளர் மயில்வாகனன், மற்றும் மாநில துணை அமைப்புச் செயலாளர் டூயட் சசிகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். மேலும் நிகழ்ச்சியில் சேலம் மேக்ஸி விஷன் கண் மருத்துவமனையின் தமிழக முதன்மை மேலாளர் சகாயம், சேலம் மாவட்டத்தின் முகாம் மேலாளர் ராஜேந்திரன்,
பள்ளியின் மேலாளர் சேகர் ஜெபசிங், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆனந்தன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். அதனைத் தொடர்ந்து செயற்குழு கூட்டத்தில் பன்முகக் கலைஞர்களின் நலன் குறித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்