திருச்சியில் நடைபெற்ற மிஸ் திருச்சி அழகி போட்டி – ஒய்யார நடை போட்டு பார்வையாளர்களை கவர்ந்த அழகிகள்!

0

2024 ஆம் ஆண்டிற்கான மிஸ்டர், மிஸ்ஸஸ், மிஸ், ஜூனியர் திருச்சி அழகி போட்டி திருச்சி மொராய் சிட்டி பகுதியில் நடைபெற்றது. இதில் திருமணமான பெண்கள், திருமணம் ஆகாத இளம் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என 5 பிரிவுகளின் கீழ் அழகி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் திருச்சி மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 35 பேர் கலந்து கொண்டனர்.

முதலில் குழந்தைகளுக்கான அழகி போட்டியும், பிறகு இளம் பெண்களுக்கான அழகி போட்டியும் நடைபெற்றது. இதில் குழந்தைகள் பல வண்ணங்களில் உடை அணிந்து ராம்ப் வாக் செய்து காட்டி அசத்தினர். பிறகு திருமணம் ஆகாத பெண்களுக்கான பிரிவில் நடைபெற்ற அழகி போட்டியில் மயில் போல அண்ண நடை போட்டு அழகிகள் பார்வையாளர்களை அசத்தினர். இதில் கருப்பு உடையில் ராம்ப்வாக் செய்த காரைக்கால் பகுதியை சேர்ந்த மன்சூரா டோலினா என்ற பெண் மிஸ் திருச்சி பட்டம் வென்று முதல் இடத்தைப் பிடித்து அசத்தினார். பிறகு அவருக்கு தலையில் கிரீடம் வைத்து கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருமணம் ஆன பெண்கள் பிரிவில் நடைபெற்ற அழகிப் போட்டியில் பெண்களுக்கே உரித்தான வெட்கத்துடன் சிரித்து ஒய்யாரமாக நடை போட்டு ராம்ப் வாக் செய்து பார்வையாளர்களை கவர்ந்தனர்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் விசித்ரா செய்தியாளரிடம் கூறுகையில்..

இப்போது வெற்றி பெற்ற மிஸ், மிஸ்ஸஸ், மிஸ்டர், கிட்ஸ் திருச்சி என்ற பட்டத்தை வென்றவர்களை அடுத்த கட்டமாக மிஸ் தமிழ்நாடு, மிஸ் வேர்ல்ட் என அவர்களை கொண்டு செல்லப் போகிறோம் என்றார்.

மிஸ் திருச்சி பட்டத்தை வென்ற மன்சூரா டோலினா கூறுகையில்…

இப்போதுள்ள பெண்களுக்கு மாடலிங் என்றால் என்ன என்று தெரியாமல் இதை தப்பான வேலை என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது முற்றிலும் தவறானது. இது நம்முடைய அழகு சார்ந்த லட்சியமாக பார்க்க வேண்டும். குறிப்பாக பெற்றோர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் உங்கள் பிள்ளைகள் மாடலிங் செய்ய விரும்பினால் கண்டிப்பாக ஒத்துக்கொண்டு அவர்களுக்கு பக்க பலமாக இருந்து அவர்களை வழி நடத்துங்கள். கண்டிப்பாக அவர்களும் மிஸ் யுனிவர்ஸ் ஆகலாம் என தெரிவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்