அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில், காந்தி மார்க்கெட் பகுதி செயலாளர் சுரேஷ் குப்தா ஏற்பாட்டில் பெரிய கடை வீதி அருள்மிகு ஸ்ரீ சொர்ண பைரவநாத சுவாமி திருகோவிலில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர் டி. ரத்தினவேல், மாவட்டத் துணைச் செயலாளர் கருமண்டபம் பத்மநாதன், பகுதி செயலாளர்கள் எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, கலைவாணன், ரோஜர் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.