திருச்சி புத்தூர் மாநகராட்சி பள்ளியில் பூட்டை உடைத்து பணம் மற்றும் பள்ளிக்கு வழங்கப்பட்ட பொருட்கள் திருட்டு

0

- Advertisement -

திருச்சி புத்தூர் மாநகராட்சி பள்ளியில் பூட்டை உடைத்து பணம் மற்றும் பள்ளிக்கு வழங்கப்பட்ட பொருட்கள் திருட்டு

 

திருச்சி புத்தூர் வண்ணாரப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி பள்ளியில் மர்ம நபர்கள் பூட்டி இருந்த கண்ணாடி கதவுகளை உடைத்து 25 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் பள்ளிக்கு வழங்கப்பட்ட பொருட்கள் திருடிச் சென்றுள்ளனர்.

- Advertisement -

பள்ளி செயல்படும் நாட்களில் இரவு நேரங்களில் கஞ்சா மற்றும் மதுபோதை ஆசாமிகள் பள்ளி முன்புறம் பாழ்படுத்தி வந்ததாகவும், கஞ்சா ஆசாமிகள் யாரேனும் இது போன்ற செயலில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கைரேகை மற்றும் தடையவியல் நிபுணர்களைக் கொண்டு ஆய்வு செய்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்படாததால் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் சற்று சிரமம் ஏற்பட்டுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்னதாக கஞ்சா போதையில் பள்ளி வகுப்பறையில் ஒருவர் படுத்து உறங்கி உள்ளார.காலை பள்ளி திறக்கும் பொழுது ஆசிரியர்கள் அவர் எழுப்பி அனுப்பி வைத்ததாக குறிப்பிட்டனர்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்