- Advertisement -

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில் சித்திரைத் தேர்த்திருவிழா – திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

0

- Advertisement -

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் சித்திரைத் தேர்த்திருவிழா வரும் 06.05.2024 திங்கட்கிழமையன்று நடைபெற உள்ளது. இதனையொட்டி அன்றைய தினம் திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார்.

இத்தேர்த் திருவிழாவினை முன்னிட்டு, திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். எனினும் பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகள் நடைபெறுவதில் இந்த விடுமுறை பொருந்தாது.

Bismi

மேற்கண்ட விடுமுறை நாளில் மாவட்டத்தில் அரசு பாதுகாப்பு தொடர்பான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள், கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.

Vagai

இவ்உள்ளூர் விடுமுறையானது 2024 பாராளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் அலுவலர்கள் / பணியாளர்களுக்கு பொருந்தாது. மேலும் இந்த விடுமுறைக்குப் பதிலாக வருகின்ற சனிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்