பாஜகவின் தேர்தல் அறிக்கை தேறாத அறிக்கை – திருச்சியில் கி.வீரமணி பேட்டி
சட்டமேதை அம்பேத்கரின் 134 வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று திருச்சி அரிஸ்டோ ரவுண்டானாவில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு திராவிடர் கழகம் சார்பில் தலைவர் கி.வீரமணி தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கி.வீரமணி…

19 ஆம் தேதி நடக்க இருக்கிற பொதுத் தேர்தலில் இந்திய அரசு சட்டம் நீடிக்க வேண்டுமா, மீண்டும் மோடி ஆட்சி
ஏற்பட்டு மனுதர்மம் அரசியல் சாசனம்
ஏற்பபடுத்தப்பட வேண்டுமா என சொல்லக்கூடிய அளவுக்கு மிகப்பெரிய சவால் இந்திய நாடு எதிர்கொண்டு உள்ளது.
மாநிலங்களவையை அழிக்க வேண்டும் என்று நினைத்து எதையெதெல்லாம் போற்றி பாதுகாத்து வந்தார்களோ, அந்த சமூக நீதி, சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவம் இவைகள் எல்லாவற்றையும் குழிதோண்டி புதைக்கும் வகையில் மோடி ஆட்சி மீண்டும் வரக்கூடாது என்ற அளவிலே இந்தியா கூட்டணியினர் ஒன்று கூடியிருக்கின்றனர். எனவே மீண்டும் அந்த ஆட்சி வரப்போவதில்லை. இந்தியா கூட்டணி ஆட்சி வந்தால் அம்பேத்கரின் அடித்தட்டான அரசியல் சாசனம் பாதுகாக்கப்படும்.
இந்த ஆண்டு அம்பேத்கருடைய பிறந்தநாள் தனி சிறப்பு உண்டு. அவருடைய அரசியல் சட்டமான அடித்தட்டு ஜனநாயகத்தை ஒழிக்க வேண்டும் என்று சொல்லுகின்ற, சமத்துவம் வேண்டுமென்று சொல்லுகிறவருக்கு நடைபெறுகிற போராட்டம் இது. அம்பேத்கர் ஒளிவிளக்காக இருக்கிறார்.
இந்திய கூட்டணி வெற்றியை வைத்து மாலை சூட்டுவோம்.
இன்று பாரதிய ஜனதா கட்சியினர் தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார்கள் என்ற கேள்விக்கு..
பாரதிய ஜனதா உடைய தேர்தல் அறிக்கை மக்களுக்கு ஏற்கனவே தெரியும், ஏனென்றால் அது தேறாது. எப்போது தேர்தல் அறிக்கை வெளியிட்டாலும் கவலை இல்லை. அவங்க தேர்தல் அறிக்கையில் மதவெறி, ஜாதி வெறி தான் இருக்கும். தேர்தல் அறிக்கையில் வெளிச்சமாக தெரிவது தேர்தல் பத்திரம் தான்.
அவர்கள் தேர்தலை தேர்தல் பத்திரத்தை வைத்து சந்திக்கிறார்கள் என தெரிவித்தார்.





**mitolyn official**
Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.