- Advertisement -

திருச்சி அதிமுக சார்பில் பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் – மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது!

0

- Advertisement -

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் திருச்சி, தில்லை நகர் பகுதியில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது.

Bismi

Vagai

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட அதிமுகவையும், இரட்டை இலையையும், மறைந்த தமிழக முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் சட்டப் போராட்டம் நடத்தி மீட்டெடுத்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவிப்பது, திருச்சி மாநகர் மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் ஒன்றிணைந்து திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளரை வெற்றி பெற செய்து, சிறப்பாக தேர்தல் பணியாற்றுவது, திருச்சி பாராளுமன்ற தேர்தல் நேர்மையாகவும் நியாயமாகவும் நடைபெற மாவட்ட ஆட்சித் தலைவர் உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில், கழக அமைப்பு செயலாளர் டி. ரத்தினவேல், முன்னாள் அமைச்சர் நல்லுசாமி, கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை துணை செயலாளர்கள் அரவிந்தன், ஜோதிவாணன், மாவட்டக் கழக அவைத் தலைவர் மலைக்கோட்டை ஐயப்பன், மாவட்ட கழக துணை செயலாளர் கருமண்டபம் வி.பத்மநாதன், புரட்சித்தலைவி அம்மா பேரவை மாவட்ட செயலாளர் பொறியாளர் சி.கார்த்திகேயன், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் கோ.கு.அம்பிகாபதி, எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சிந்தை எல்.முத்துக்குமார், மாணவரணி மாவட்ட செயலாளர் பொறியாளர் ஜெ.இப்ராம்ஷா, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ஆர் வெங்கட் பிரபு, இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் இலியாஸ், மீனவராணி மாவட்ட செயலாளர் தென்னூர் அப்பாஸ், கலை பிரிவு மாவட்ட செயலாளர் ஜான் எட்வர்ட் குமார் மற்றும் கழக பொதுக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்