- Advertisement -

திமுக கவுன்சிலர் காஜாமலை விஜய்யை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் – சூர்யா சிவா திருச்சியில் பேட்டி!

0

- Advertisement -

பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழ் மக்களின் குறைதீர்க்கும் முகாம் திருச்சி கே.கே.நகர் பகுதியில் இன்று நடைபெற்றது. நிகழ்விற்கு வெளிநாடு வாழ் மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப்பிரிவின் மாநில தலைவர் இசையமைப்பாளர் தீனா மற்றும் பாஜக ஓ.பி.சி அணி மாநில பொதுச் செயலாளர் சூர்யா சிவா ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ் வளர்ச்சிப்பிரிவின் மாநில துணை தலைவர் சுகு பூப்பாண்டியன் வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மனித உரிமைகள் கழகம் மாநில தலைவர் ஜேபி என்கிற ஜெயராம் பாண்டியன் செய்திருந்தார். இதில் நிர்வாகிகள், புதிய உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

Vagai

இறுதியாக பாஜக ஓ.பி.சி அணி மாநில பொதுச் செயலாளர் சூர்யா சிவா செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்….

திருச்சி திமுகவில் என்ன சர்ச்சைகள் ஏற்பட்டாலும் அதற்கு காஜாமலை விஜி தான் காரணமாக இருப்பார். எனது தந்தையின் வீடு, கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் பெண் காவலரை தாக்கியது, காஜாமலை பகுதியில் வங்கியை கையகப்படுத்த சென்ற டி.ஆர்.ஓ தாக்கப்பட்டதற்கும் இவர்தான் ஏ1 குற்றவாளி. இதேபோல் மாமன்ற கூட்டத்தில் மேயரை ஆபாச வார்த்தைகளால் பேசிய வீடியோக்களும் வெளியே வந்துள்ளது.

Bismi

சமீபத்தில் நான் ஒரு வீடியோவை பதிவிட்டு இருந்தேன் அதில், மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று மாநகராட்சி ஊழியர்களை காண்ட்ராக்ட் கொடுக்கவில்லை என கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். அமைச்சர் கே.என் நேருவும் முன்னர் இதே வேலையை தான் செய்து வந்தார். ஆனால் தற்போதுள்ள டிஜிட்டல் மீடியா, சோசியல் மீடியாவால் விஷயங்கள் முடி மறைக்க முடியாமல் வெளியே வந்து விடுகிறது. எல்லா அரசு அதிகாரிகளையும் வெளிப்படையாகவே மிரட்டி, அடிக்கிறார்கள் என்றால் சாமானிய மக்கள் என்ன ஆவார்கள்.

மேயர் தன்னுடைய தொகுதிக்கு நிதி ஒதுக்கவில்லை அதற்காக தீ குளிக்கிறேன் என்று சொல்லும் அளவிற்கு காஜாமலை விஜி ஒன்றும் நல்லவர் இல்லை. அவருக்கு என்ன பிரச்சனை என்றால் மாநகராட்சி காண்ட்ராக்ட் அவருக்கு ஒதுக்கப்படவில்லை என்பதுதான் காரணம்.

அவருடைய மனைவி பெயரில் சிடோ கிரடார் என்ற கம்பெனி ஒன்று நடத்துகிறார். மாமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய ஒருவர் அவரது மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் எந்த ஒரு நிறுவனமும் இருக்கக் கூடாது, ஆனால் இவர் தனிப்பட்ட முறையில் மனைவி பெயரில் பல காண்ட்ராக்ட் எடுக்கிறார். இதில் எந்த பணியும் தரமாக செய்வது இல்லை அதில் பல பிரச்சினைகள் உருவாகிறது.

பெரிய தொகை வரக்கூடிய அனைத்து காண்ட்ராக்ட்களும் தனக்கு வர வேண்டும் என்று பார்க்கிறார். அதை கொடுக்காத பட்சத்தில் மேயரை கட்டாயப்படுத்தி அதை செய்ய வைக்க பார்க்கிறார்.

மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் பெட்ரோல் ஊற்றிக் கொள்ளும் போது கையில் தீப்பெட்டியுடன் வருவார்கள். ஆனால் இவர் இரண்டு கையிலும் பெட்ரோல் பாட்டில் மட்டும் வைத்துக் கொண்டு சீன் கிரியேட் செய்து மேயருக்கு அழுத்தம் கொடுக்கிறார்.
எனவே கண்டிப்பாக மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையர் காஜாமலை விஜியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்