- Advertisement -

திருச்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் பயனாளிகளுக்கு ₹. 20.18 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்கள்!

1

- Advertisement -

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் இன்று நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு திருச்சி மாவட்டதில் பல்வேறு துறைகளின் சார்பில் ரூ. 65.03 கோடி மதிப்பீட்டில் 96 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ. 5.68 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்ககப்பட்ட 13 புதிய கட்டடங்களை பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, 7128 பயனாளிகளுக்கு ரூ.20.17 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், பழனியாண்டி, ஸ்டாலின்குமார், கதிரவன், மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜேந்திரன், துணை மேயர் திவ்யா மற்றும் மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Bismi

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
1 Comment
  1. mitolyn official says

    **mitolyn official**

    Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்