திருச்சியில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்!

0

சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு விபத்து இல்லாமல் வாகனத்தை இயக்க பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்தும், வாகனத்தில் சீட் பெல்ட் அணிந்து பயணம் செய்வதன் அவசியம் குறித்தும் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி திருச்சியில் இன்று நடைபெற்றது. பேரணியை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

- Advertisement -

திருச்சி மேல சிந்தாமணி பகுதியில் உள்ள இந்திரா காந்தி கல்லூரி மைதானத்தில் தொடங்கிய இப்பேரணியானது காவேரி பாலம், மாம்பழச்சாலை வழியாக ஶ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் அருகில் உள்ள ஆர்.டி.ஓ மைதானத்தில் நிறைவடைந்தது. இந்நிகழ்வில் வட்டார போக்குவரத்து அலுவலர் குமார், காவல் உதவி ஆணையர் ஜோசப் நிக்சன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அருண் குமார், முகமது மீரா, பிரபாகர், செந்தில் சுப்பிரமணியம், சத்யா மற்றும் ஓட்டுநர் பயிற்சி பள்ளி நிர்வாகிகள், வாகன விற்பனையாளர்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்