திருச்சியில் வரும் 12 ஆம் தேதி குருப்-4 தேர்வுக்கான 100 நாட்கள் சிறப்பு பயிற்சி வகுப்புகள் துவக்கம் – மாவட்ட ஆட்சியர் தகவல்!

0

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட 6244 நிர்வாக காலிப்பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு குருப்-4 தேர்வு அறிவிப்பாணை 30.01.2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 28.02.2024 ஆகும். மேலும் இத்தேர்வானது 09.06.2024 அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வினை போட்டித்தேர்வர்கள் சிறப்பாக எதிர்கொள்ளும் வகையில் சிறப்பு கட்டணமில்லா “100 நாட்கள் சிறப்பு பயிற்சி வகுப்பு” திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 12.02.2024 புதன் கிழமை காலை 10 மணி அளவில் துவங்கப்பட உள்ளது. மேற்கண்ட பயிற்சிவகுப்பில் சிறப்பு பயிற்றுநர்களை கொண்டு அனைத்துப் பாடப்பகுதிகளுக்கும் பயிற்சியளிப்பதுடன், பாடவாரியாக மாதிரித்தேர்வுகள் நடத்தப்பட்டு இலவசமாக பாடக்குறிப்புகளும் வழங்கப்படும். ஆகவே, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து போட்டித் தேர்வர்களும் இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து, பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு 0431-2413510, 9499055901, 9499055902 என்ற திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்