சென்னையில் நடைபெற்ற பல்வேறுபட்ட ஸ்கேட்டிங் போட்டிகளில் திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த சிறுவன் தங்கப்பதக்கங்களை வென்று சாதனை!

0

- Advertisement -

மாநில அளவிலான சிறுவர் ஸ்கேட்டிங் போட்டி சென்னையில் நடைபெற்றது. 4 வயது முதல் 12 வயது வரை நடைபெற்ற இப்போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த S.V. பிரசாந்த் மற்றும் சர்மதா தம்பதியினரின் மகனும், எஸ்.ஆர்.எம்.யூ துணைப் பொதுச்செயலாளரும், திருச்சிக்கோட்ட செயலாளரும், பொன்மலை பகுதியின் பொறுப்பாளருமாகிய எஸ். வீரசேகரனின் பேரனுமாகிய அகோர்பத்ரன் (எ) பிரணவ்தனீஸ் கலந்து கொண்டு SMALL DASH 4 MINUITES பிரிவில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கமும், ZIGZAG SKATING RACE பிரிவில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கமும் வெற்றி பெற்றுள்ளார். மேலும் SOLO SKATE DANCE, GROUP SKATE DANCE உள்பட அனைத்து போட்டிகளில் வெற்றி பெற்று நான்கு தங்கப் பதக்கம், மூன்று கேடயங்களை வென்று திருச்சி திரும்பியுள்ளார். 4 முதல் 12 வயது உள்ளவர்களுக்கான இப்போட்டியில், ஆயிரக்கணக்கானவர்களுக்கு மத்தியில் தனி முத்திரை பதித்து திருச்சிக்கு பெருமைதேடித் தந்த மழலை செல்வம் பிரணவ் தனிஷை பல்வேறு தரப்பினரும் வாழ்த்தி, கொண்டாடி வருகின்றனர்.

- Advertisement -

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்