திருச்சியில் முருகன் கோவில் சுவர் இடிப்பு பொதுமக்கள் சாலை மறியல்

0

திருச்சியில் முருகன் கோவில் சுவர் இடிப்பு பொதுமக்கள் சாலை மறியல்

திருச்சி, எடமலைப்பட்டி புதூர் அருகே உள்ள எடமலைப்பட்டியில் சுமார் 350 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ராமச்சந்திரா நகரில் உள்ள எடமலை முருகன் கோவிலை, 50 ஆண்டுகளுக்கு மேலாக வழிபட்டு செய்து வருகின்றனர்.


இங்கு முருகன் கோவில் சமூக விரோத செயல்கள் நடப்பதாக கூறி போலீஸ் மற்றும் கலெக்டரிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். மனுவின் மீது நடவடிக்கை இல்லாததால், கடந்த 2004 ல் நீதிமன்றத்தில் ஆணை பெற்று, எடமலை முருகன் கோவிலில் எடமலைப்பட்டி பொதுமக்கள் சார்பில் காம்பவுண்டு சுவர் கட்டியுள்ளனர். இதை மர்ம நபர்கள் சிலர் நேற்று இடித்ததாக தெரிகிறது இதுகுறித்து போலீசாரிடம் அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ள நிலையில், எடமலைப்பட்டி மக்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து திருச்சி கிராப்பட்டி மேம்பாலத்தில் சாலையில் அமர்ந்து இன்று மறியலில் ஈடுபட்டனர்,

- Advertisement -

முன்னதாக போலீசார் மறியல் செய்த அந்த பொது மக்களை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளு,முள்ளு,மோதல், வாக்குவாதம் ஏற்பட்டது . இதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள், கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், சுவரை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அதற்கு கலெக்டர் வந்து உறுதி அளிக்கும் வரை இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம் என்று மறியலில் ஈடுபட்டனர்,


மேலும் ரேஷன் கார்டு, ஆதார் கார்டுகளை ஒப்படைக்கிறோம் .
இந்திய குடியுரிமையை வேண்டாம் என்று கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வந்த போலீஸ் வேனில் ஊர் பொதுமக்கள் ஏறி எங்களை கைது செய்யுங்கள் என்று வலியுறுத்தினர். பொதுமக்களின் போராட்டத்தை சமாளிக்க முடியாமல் போலீசார் திணறினர் அப்போது ஆம்புலன்ஸ் ஒன்று போராட்ட கூட்டத்திற்குள் மாட்டிக் கொண்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆம்புலன்ஸக்கு மட்டும் வழிவிட்டனர். தொடர்ந்து பொதுமக்களிடம் போலீசாரும் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். எடமலைப்பட்டி புதூர் கவுன்சிலர் முத்து செல்வமும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு அவர்களின் வேண்டுகோளை ஏற்று தீர்வு பெற்று தருவதாக கூறிய பின் ஊர் பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர்,
இந்த சம்பவத்தால் எடமலைப்பட்டி புதூர் மற்றும் கிராபட்டியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

எடமலைப்பட்டி கவுன்சிலர் பேச்சு வார்த்தைக்கு ஏன் வரவில்லை என்று அப்பகுதி பொதுமக்கள் கேள்வி எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது,

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்